சிறையில் இருக்கும் எஸ்.ஏ.பாஷாவை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் மனுவை பரிசீலிக்க வேண்டும்

கோவையில் 1998–ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், அல்உம்மா அமைப்பின் நிர்வாகி எஸ்.ஏ.பாஷா உள்பட பலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2017-12-13 23:36 GMT

சென்னை,

பாஷாவின் மகள் முபீனா, சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த 22 ஆண்டுகளாக சிறையில் உள்ள தன்னுடைய தந்தை பாஷாவை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ராஜீவ் ‌ஷக்தேர், என்.சதீஷ்குமார் ஆகியோர் விசாரித்து, மனுதாரர் தன் தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்ய கொடுத்துள்ள கோரிக்கை மனுவை தமிழக அரசு 6 வாரத்துக்குள் பரிசீலித்து, தகுந்த முடிவு எடுக்க வேண்டும். அந்த முடிவை மனுதாரருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்