அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்வு: ராகுல்காந்திக்கு, திருநாவுக்கரசர் வாழ்த்து
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை மத்திய தேர்தல் குழுவின் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை மத்திய தேர்தல் குழுவின் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் அறிவித்திருக்கிறார். உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் 132 ஆண்டு கால வரலாறு படைத்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 47 வயது நிரம்பிய இளம் தலைவர் ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதன் மூலம் கோடானு கோடி காங்கிரஸ் கட்சியினரின் எதிர்பார்ப்பு நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி வரலாற்றில் இன்னாள் ஒரு பொன்நாள். இந்திய அரசியலில் புதிய சகாப்தம் தொடங்க இருக்கிற இந்த அறிவிப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
சோனியாகாந்தியிடம் இருந்து கட்சியின் தலைமைப் பொறுப்பை ஜனநாயக ரீதியாகவும், தேர்தல் மூலமாகவும் ராகுல்காந்தி ஏற்க இருப்பது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவையாகும். ராகுல்காந்திக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.