ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தா.பாண்டியனை வைகோ நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். இவருக்கு சளித்தொல்லை மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது.;

Update: 2017-12-10 17:43 GMT
சென்னை, 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். இவருக்கு சளித்தொல்லை மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் நேற்று சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆஸ்பத்திரிக்கு சென்று, தா.பாண்டியனை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.


மேலும் செய்திகள்