காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் தராததால் 10-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் தராததால் மாணவி சரிகா பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை,
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 10- வகுப்பு மாணவி சிறுநீரக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்ல 7 மணி நேரமாக ஆம்புலன்ஸ் தராததால் மாணவி சரிகா பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்ல 7 மணி நேரமாக ஆம்புலன்ஸ் தராததால் மாணவி உயிரிழந்ததாக மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மருத்துவமனையில் மாணவியை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தராத புகார் பற்றி விசாரிக்கப்படும் என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.