புயல் சின்னம் அறிவிப்பு: நாகை மீனவர்கள் 14வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

புயல் சின்னம் அறிவிக்கப்பட்ட நிலையில் நாகை மீனவர்கள் 14வது நாளாக கடலுக்கு இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2017-12-10 04:15 GMT
நாகை,

வங்க கடலில் கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த ‘ஒகி’ புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த மாத இறுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இதனால் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நடுக்கடலில் சிக்கி கொண்டனர்.  அவர்களில் பலர் இன்னும் மீட்கப்படவில்லை.  இந்த நிலையில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து 14வது நாளாக இன்றும் நாகை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இதனை அடுத்து 1,500 விசை படகுகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்