பாசன வசதிக்காக பாரூர் பெரிய ஏரியில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு எடப்பாடி பழனிசாமி உத்தரவு

பாசன வசதிக்காக பாரூர் பெரிய ஏரியில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறந்து விட எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2017-12-08 20:00 GMT
சென்னை, 

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக சாகுபடிக்கு பாரூர் பெரிய ஏரியிலிருந்து 10–ந்தேதி (நாளை) முதல் 29.3.2018 வரை 110 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2,397.42 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்