தாயை கொன்ற வழக்கில் கைதான தஷ்வந்த் இன்று இரவு சென்னை அழைத்து வரப்படுகிறார்
தாயை கொன்ற வழக்கில், மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் இன்று இரவு சென்னை அழைத்து வரபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை,
மாங்காடு அருகே நகைக்காக பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்து விட்டு நகைகளுடன் தலைமறைவாக இருந்த தஷ்வந்தை, மாறுவேடத்தில் சென்ற தனிப்படை போலீசார் மும்பையில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். கைதான தஷ்வந்தை மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனை தொடர்ந்து தஷ்வந்தை வரும் சனிக்கிழமை தமிழக சிறையில் அடைக்க மும்பை பாந்த்ரா நீதிமன்றம் உத்தரவிட்டது. மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து தஷ்வந்த் இன்று இரவு சென்னை அழைத்து வரப்படுகிறார்.