நமது கொங்கு முன்னேற்றக் கழகத்திற்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது
நமது கொங்கு முன்னேற்றக்கழக வேட்பாளர் ரமேஷுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
சென்னை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது. சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற உள்ளதால், தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திற்கு தினகரன் வருகை தந்துள்ளார்.
டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு .ஏற்கனவே 29 பேர் தொப்பி சின்னத்தை கோரி இருந்தனர். இதில் பதிவு பெற்ற இரண்டு கட்சிகளும் அடங்கும் ஆர்.கே. தொகுதியில் பதிவு செய்த இரு கட்சிகள் தொப்பி சின்னத்தை கேட்பதால் தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லை.
நமது கொங்கு முன்னேற்ற கழகம், தேசிய மக்கள் சக்தி கட்சி ஆகியவை தொப்பி சின்னத்தை கேட்கின்றன. இதனால் தொப்பி சின்னம் பதிவு பெற்ற இரண்டு கட்சிகளுக்கு குலுக்கல் முறையில் வழங்கப்பட உள்ளது.
பதிவுசெய்யப்பட்ட கட்சிகளுக்கு குலுக்கல் முறையில் தொப்பி சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
நமது கொங்கு முன்னேற்றக்கழக வேட்பாளர் ரமேஷுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
ஆர்.கே. நகரில் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்தர். மதுசூதனனின் படிவம் B-ல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி என 2 பேர் கையெழுத்திட்டதால், இரட்டை இலை சின்னம் ஒதுக்க தினகரன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.