தேர்தல் அதிகாரியுடன் நடிகர் விஷால் சந்தித்து வேட்பு மனுவை மீண்டும் பரிசீலிக்க கோரிக்கை

ஆர்.கே.நகர் தேர்தலை நடத்தும் அதிகாரி வேலுச்சாமியுடன் நடிகர் விஷால் சந்தித்து வேட்பு மனுவை மீண்டும் பரிசீலிக்க கோரிக்கை வைத்தார்

Update: 2017-12-07 09:57 GMT
சென்னை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் களமிறங்கி வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். 

தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பேட்டியளித்து வருகிறார். இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியையும் சந்தித்து முறையிட்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையம், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரையும் முறையிடப்போவதாக தெரிவித்திருக்கிறார்.’

இந்த நிலையில் விஷால் மனுவை முன்மொழிந்த தீபன், சுமதி நேரில் வந்து கையெழுத்து தங்களது தான் என கூறினால்  மனு ஏற்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. மனு ஏற்கப்பட்டால் மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும், இன்று மாலை 3 மணி வரை விஷால் மனு ஏற்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன. 

இது குறித்து சென்னையில் நிருபர்களூக்கு பேட்டி அளித்த   நடிகர் விஷால் கூறியதாவது :-

தீபன் -சுமதி எங்கிருக்கிறார்கள் என கண்டு பிடிக்க முடிய வில்லை.  தீபன், சுமதி எங்கு உள்ளார்கள் என தெரியவில்லை. அவர்கள் பாதுகாப்பாக  உள்ளார்களா?  என்பதற்காகவும் அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். நான் தேர்தலில் போடியிடுவதற்காக  அல்ல . அவர்கள் பாதுகாப்புகாக தேடுகிறோம். நான் போட்டியிடுவதை விட அவர்களின் பாதுகாப்பே முக்கியம் . 2 பேர் குறித்தும் காவல் நிலையத்தில் புகாரளிக்க செல்கிறேன் என கூறினார்.

பின்னர் அவர் ஆர்.கே நகர்  தேர்தல் அலுவலகம்  உள்ள தண்டையார் பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி வேலுசாமியை சந்தித்தார். தனது வேட்பு மனுவை மறு பரீசிலனை செய்யுமாறு கோரிக்கை வைத்து உள்ளார். தன்னை முன் மொழிந்த தீபன் சுமதி காணாமல் போனது குறித்தும் புகார் கூறினார்.

மேலும் செய்திகள்