ஆர்.கே.நகர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் தொடங்குகிறார்

ஆர்.கே.நகர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் தொடங்குகிறார்

Update: 2017-12-06 21:15 GMT
சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக மதுசூதனன், தி.மு.க. வேட்பாளராக மருதுகணேஷ், பா.ஜ.க. வேட்பாளராக கரு.நாகராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். சுயேட்சை வேட்பாளராக சசிகலா உறவினர் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மதுசூதனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். இன்று காலை 9 மணிக்கு ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. தேர்தல் பணிமனையை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

அதனை தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களை சந்தித்து அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை வட சென்னை அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்