கட்சியின் பெயரையும், கொள்கையையும் விரைவில் வெளியிடுவேன் கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு
கட்சியின் பெயரையும், கொள்கையையும் விரைவில் வெளியிடுவேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
டெல்லியில் நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:
என்னுடைய அரசியல் கட்சியின் பெயரையும், கொள்கையையும் விரைவில் வெளியிடுவேன். பாஜக, காங்கிரசுடன் கொள்கை ரீதியான கூட்டணி வைக்கமாட்டேன், தமிழகத்தின் நலன் கருதி கூட்டணி வைக்கலாம். அரசியலுக்கு வரும் தைரியம் எனக்கு இருக்கிறது, தோல்வி பயம் இல்லை. தமிழக அரசியலில் என்னை முன்னிறுத்தாமல் மாற்றத்தை முன்னிறுத்துகிறேன், மாற்றத்தை விரும்புகிறவர்கள் என்னை ஆதரிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.