ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் சுயேட்சை வேட்பாளர் தான்: அதிமுக எம்.பி மைத்ரேயன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் சுயேட்சை வேட்பாளர் தான் என்று அதிமுக எம்.பி மைத்ரேயன் தெரிவித்தார்.

Update: 2017-11-25 13:15 GMT
சென்னை,

அதிமுக மாநிலங்களவை எம்.பி மைத்ரேயன் இன்று மாலை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில்   ஆளுநருடனான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மைத்ரேயன் கூறுகையில், “ 

தோப்பூர் முப்பெரும் விழா நடத்தப்பட்டது எங்களுக்கு சற்று நெருடலாகத்தான் உள்ளது. எங்களுக்கு தகவல் கொடுக்காமல் நடத்தப்பட்டது ஆதங்கமாக உள்ளது. மதுரையில் இருந்த பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் தகவல் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. பழைய விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இத்தகைய நிகழ்வுகள் நடக்காதவாறு முதலமைச்சர், துணை முதலமைச்சர் பார்த்துக்கொள்ள வேண்டும். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் சுயேட்சை வேட்பாளர் தான். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக ஆதரவளிக்குமா என்பது குறித்து கவலையில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி நிச்சயம்,  2வது இடம் யாருக்கு என்பதில் திமுக மற்றும் தினகரனுக்கு இடையே போட்டி உள்ளது. அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்