ஆட்சி மாற்றம் ஏற்பட வியூகம் வகுப்போம்; தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்
ஆட்சி மாற்றம் ஏற்பட வியூகம் வகுப்போம் என தொண்டர்களுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆட்சி மாற்றம் ஏற்பட வியூகம் வகுப்போம். சட்டத்தின் வழியில் ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் காண்போம் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், அடித்தட்டு மக்களுக்கு படிக்கட்டாக நிற்போம். அவர்கள் ஏற்றம் பெற அயராது உழைப்போம்.
சட்டம் மற்றும் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்றால் ஆளவே தெரியாதவர்களுக்கு கோபம் வருகிறது என தெரிவித்துள்ளார்.