தடையின்றி முட்டை வழங்கப்படுகிறது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சரோஜா பதில்

சென்னை,
தமிழகத்தில் அனைத்து அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு மையங்களில் எந்த தடையுமின்றி முட்டை தொடர்ந்து வழங்கப்படுகிறது என்று அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2012-ம் ஆண்டு அக்டோபரில் இருந்து முட்டை கொள்முதலில் மாநில அளவில் ஒரே ஒப்பந்தபுள்ளி கோரும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது வரை அதன்படி முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தேசிய ஒருங்கிணைப்பு குழு வைத்துள்ள விலையுடன் ஒப்பிட்டு, முட்டைகளை பண்ணையிலிருந்து எடுத்துச்செல்வதற்கான போக்குவரத்து செலவினம் என பல்வேறு செலவினங்களையும் கருத்தில் கொண்டு முட்டையின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 2017-18ம் ஆண்டுக்கு (ஜூலை மாதம் வரை) ஒரு முட்டையின் விலை ரூ.4.34 காசுகளாக (போக்குவரத்து செலவினம் உள்பட) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கு தேவையான முட்டைகள் அனைத்தும் அந்தந்த அங்கன்வாடி மையங்களுக்கு வாரம் ஒருமுறை மட்டும் மொத்தமாக ஒப்பந்ததாரர்களால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சத்துணவு மையங்களுக்கு வாரத்திற்கு 2 முறை முட்டைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
முட்டைகளை கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகள், கொள்முதல் செய்யப்படும் முட்டைகளின் தரம் மற்றும் விலை நிர்ணயம் குறித்த சரியான வழிமுறைகளையும், நெறிமுறைகளையும் வகுத்து அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சில செய்தித்தாள்களில் (’தினத்தந்தி’ அல்ல), விலை ஏற்றத்தால் முட்டை வினியோகத்தில் திடீர் சிக்கல் என்றும், பள்ளி சத்துணவில் முட்டை நிறுத்தம் என்றும் செய்திகள் வெளியாகின. அதுபற்றிய எதிர்க்கட்சி தலைவரின் அறிக்கையும் வந்துள்ளது. ஆனால் அனைத்து அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு மையங்களில் எவ்வித தடையுமின்றி முட்டைகள் தொடர்ந்து, எந்தவித தொய்வின்றி வழங்கப்பட்டு வருகிறது.
வெளிச்சந்தையில் உள்ள முட்டை விலை உயர்வினால் இத்திட்டத்திற்கு எந்தவித பாதிப்புமின்றி சிறப்பாக செயல்படுத்திட அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் அறிக்கையில் வெளியிட்டுள்ள செய்திகள் ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான தகவல் ஆகும்.
ஏற்கனவே ஓராண்டுக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள விலையில் ஒப்பந்ததாரர்கள் எந்த தொய்வுமின்றி முட்டைகளை வினியோகம் செய்துவரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவரின் அறிக்கை இத்திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறைகளைப் பற்றி புரிந்துகொள்ளாமல், அரசியல் செய்யும் நடவடிக்கையாகவே எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.