போயஸ் கார்டனில் நடந்த வருமான வரி சோதனையால் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் வருத்தம் அடைந்துள்ளனர்- கே.பி. முனுசாமி

போயஸ் கார்டனில் நடந்த வருமான வரி சோதனையால் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் வருத்தம் அடைந்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறினார்.

Update: 2017-11-18 08:37 GMT
சென்னை

முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் வருமான வரிசோதனை நடக்க சசிகலாவும் , தினகரனும் தான் காரணம். சோதனையிலும் அரசியல் ஆதாயம் தேட தினகரன் முயற்சிக்கிறார். போயஸ் கார்டனில் நடந்த வருமான வரி சோதனையால் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் வருத்தம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்