திமுக தலைவர் கருணாநிதியுடன் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் சந்திப்பு
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள்சந்தித்து பேசினர்.
சென்னை,
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரத்தில் ஒய்வெடுத்து வருகிறார். அவரை பல்வேறு அரசி்யல் கட்சி தலைவர்கள் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி கருணாநிதியை நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இந்நிலையில் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். கருணாநிதியை சந்தித்தப்பின் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ செய்தியார்களிடம் கூறுகையில்,
எம்.எல்.ஏக்கள் உடல்நலம் விசாரித்த எங்களை பார்த்து புன்னகைத்து பதில் தந்தார் திமுக தலைவர் கருணாநிதி.
இவ்வாறு அவர் கூறினார்.