5-வது நாளாக சோதனை: டிரைவர்-வேலைக்காரர்கள் பெயரில் வாங்கிய பினாமி சொத்து ஆவணங்கள் சிக்கியது
சசிகலா உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரது வீடுகளில் 5-வது நாளாக வருமான வரிசோதனை நடக்கிறது. டிரைவர்-வேலைக்காரர்கள் பெயரில் வாங்கிய பினாமி சொத்து ஆவணங்கள் சிக்கி உள்ளது.
சசிகலா உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரது வீடுகளில் கடந்த 9-ம் தேதி முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் 187 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை இன்னும் 20 இடங்களில் 5 வது நாளாக தொடருகிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா குடும்பத்தினரால் ரூ.280 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டிருப்பதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் உள்ள நகைக்கடை மூலம் மட்டுமே ரூ.168 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றியுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக 50 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த 50 நாட்கள் இடைவெளியில் சசிகலா குடும்பத்தினர், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் ரூ.280 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கான சில ஆவணங்களும் கைப்பற்றபட்டு உள்ளதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
சோதனையில் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி முழுமையாக முடியவில்லை. அந்தப் பணி முடிந்த பின்னரே மொத்த விவரமும் தெரியவரும். திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோர் தொடர்புடைய இடங்களில் இருந்துதான் அதிகமான ஆவணங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இவர்களின் வீடுகளில் கடந்த 9-ம் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் சோதனை நடத்தப்பட்டது. இங்கு நடத்தப்பட்ட சோதனை நேற்று மாலையுடன் முடிவடைந்தது. ஜெயா டிவி சிஇஓ விவேக் வீட்டில் 5 வது நாளாக சோதனை இன்று நடைபெற்றது. வங்கிக் கணக்குகள், பணப்பரிவர்த்தனைகள், வரவு செலவு கணக்குகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுவரை நடத்திய சோதனைகளில் டிரைவர், வேலைக்காரர்கள் பெயரில் வாங்கிய ‘பினாமி’ சொத்து ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைபற்றி உள்ளனர். இதுவரை கிடைத்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் பார்த்தால் பினாமி சொத்துக்கள் பலரது பெயர்களில் உள்ளன. அவர்களிடம் முதல் கட்ட விசாரணையே நடத்தப்பட்டுள்ளது. மீண்டும் அவர்களுக்கு ‘சம்மன்’அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்த உள்ளோம். அப்போது அந்த பினாமிகளிடம் “இவ்வளவு சொத்துக்கள் வாங்க, கோடிக்கணக்கான ரூபாய் உங்களுக்கு எப்படி வந்தது?”
அந்த பணத்துக்கான வருவாய் பற்றி கேள்விகள் கேட்கப்படும். அதன்பிறகு சொத்துக்குவிப்புக்கு உடந்தையாக இருந்ததாக பினாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பினாமி பரிவர்த்தனை (தடை) திருத்த சட்டம்-2016ன் கீழ் இந்த நடவடிக்கைகள் பாயும் என வருமான வரித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.