தினகரன் ஆதரவாளர் புகழேந்தி சென்னை வருமான வரி அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு
கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் வரும் திங்கள்கிழமை சென்னை வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
பெங்களூரு
சசிகலா- தினகரன் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம், புதுச்சேரி உள்பட பல்வேறு இடங்களில் 3-ஆவது நாளாக இன்று சனிக்கிழமையும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இரண்டு நாளாக நடைபெற்று வந்த சோதனையின்போது போலி நிறுவனங்களாக கருதப்படுபவை தொடர்பான ஆவணங்கள், கணக்கில் வராத நகைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மூன்றாவது நாளாக புதுச்சேரியில் உள்ள லட்சுமி ஜூவல்லர்ஸ் கடை, லட்சுமி குழுமத்தின் கிளை நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகள், நமது எம்ஜிஆர் அலுவலகம், ஜெயா டிவி அலுவலகம், விவேக் வீடு, சசிகலாவின் வழக்குறைஞர், அவரது நண்பர் மற்றும் ஜோதிடர் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
கர்நாடகத்தில், பெங்களூரு முருகேஷ்பாளையாவில் வசித்து வரும் கர்நாடக மாநில அ.தி.மு.க.(அம்மா) அணி செயலாளர் வா.புகழேந்தியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையின் போது சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக சொல்லப்படுகிறது.
இதேபோல் பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் உள்ள கர்நாடக மாநில அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்தும் சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. இந்த அதிகாரிகள் சென்னையில் இருந்து வந்தனர் என்று கூறப்படுகிறது.
இந்த சோதனையைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை (நவ.13) சென்னையில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் புகழேந்தி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.