அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தருவதாக ரூ.11 கோடி மோசடி கட்டுமான நிறுவன இயக்குனர் கைது
அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தருவதாக ரூ.11 கோடி மோசடி செய்ததாக கட்டுமான நிறுவன இயக்குனர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம், புதுபட்டினம் 2-வது தெரு, அஜியார் நகரை சேர்ந்தவர் அபுல்மன்சூர் (வயது 43). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், ‘மார்க் பிராப்பர்டி’ கட்டுமான நிறுவனம் காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகா, சீக்கினன்குப்பம் கிராமத்தில் ‘மார்க் சொர்ணபூமி’ என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்து 2011-ம் ஆண்டு ரூ.25 லட்சம் பணம் செலுத்தி பிளாட்டை முன்பதிவு செய்தேன்.
ஆனால் அந்த நிறுவனம் குடியிருப்பை கட்டிக்கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். எனவே அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின்பேரில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக் கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், ‘மார்க் பிராப்பர்டி’ நிறுவனம் கட்டுமான பணி நடைபெறும் என்று கூறியிருந்த இடம் சிறப்பு பொருளாதார மண்டலம் என்பது தெரியவந்தது.
அந்த இடத்தில் கட்டப்படும் பிளாட்டுகளை சிறப்பு பொருளாதார மண்டல பிரிவில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே லீசுக்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவை மீறி வாடிக்கையாளர்களை ஏமாற்றியதும் தெரியவந்தது. மேலும் அந்த நிறுவனம் காஞ்சீபுரம் மாவட்டம் காலவாக்கம் கிராமத்தில், ‘சவீதாஞ்சலி’ என்ற பெயரிலும், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பண்டூர் கிராமத்தில் ‘மார்க் பிருந்தாவனம்’ என்ற பெயரிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தருவதாக மோசடியில் ஈடுபட்டதும் தெரிந்தது.
மொத்தம் ரூ.11 கோடி அளவுக்கு மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனியில் வசித்துவரும் ‘மார்க் பிராப்பர்டி’ நிறுவனத்தின் இயக்குனர் ராமகிருஷ்ண ரெட்டி (57) என்பவரை போலீசார் கைது செய்தனர். ராமகிருஷ்ண ரெட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.