வருமான வரி சோதனை நடத்தியது ஏன்? அதிகாரிகள் விளக்கம்

பண மதிப்பு நீக்கம், கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையின் போது சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டன.

Update: 2017-11-09 17:55 GMT
சென்னை,

சசிகலா, தினகரன் தொடர்புடையவர்களின் இடங்களில் சோதனை நடத்தியது ஏன்? என்பது பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:–

பண மதிப்பு நீக்கம், கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையின் போது சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் அரசுக்கு வரி செலுத்தாமல் பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் முடக்கப்பட்ட நிறுவனங்களுடைய சொத்துகள், பணம் ஆகியவற்றை வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்படுவது குறித்து எங்களுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் இந்த சோதனை நடக்கிறது.

சோதனை நடைபெற்று வரும் இடங்கள் குறித்த முகவரியை கடந்த ஒரு மாதமாக சேகரித்தோம். தற்போது வரை 355 பேருக்கு சொந்தமான 215 அசையும், அசையா சொத்துகள், ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னர் இதன் முழு சொத்து விவரம் மற்றும் வரி ஏய்ப்பு எவ்வளவு? என்று தெரிய வரும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்