விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார் சசிகலா சகோதரர் திவாகரன்!

சசிகலா சகோதரர் திவாகரனை, விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

Update: 2017-11-09 06:02 GMT
சென்னை

சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள்  உள்பட 175க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான கலைக் கல்லூரியில் இன்று அதிகாலையில் இருந்து வருமான வரித்துறை சோதனை நடத்திக் கொண்டிருக்கிறது. இப்படியொரு வருமான வரித்துறை சோதனை என்பது இதுவே முதன் முறை என்று கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்தவரும் ஐ.டி ரெய்டுக்கு திவாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துவருகின்றனர். திவாகரன் வீட்டுக்கு முன், அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர். இதனை அடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள், திவாகரனை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்