அமைச்சர் வேலுமணி ஆஸ்திரேலியா பயணம்

தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக பார்வையிட அமைச்சர் வேலுமணி ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்டுள்ளார்.;

Update: 2017-11-08 17:15 GMT
ஆலந்தூர், 

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செயலாளர் ஹர்மிந்தர் சிங், நகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்பட 10 பேர் கொண்ட குழுவினருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மலேசியா வழியாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றார்.

உள்ளாட்சி அமைப்புகளில் மழைநீர் கால்வாய் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக பார்வையிட ஆஸ்திரேலியா சென்று உள்ளனர்.

மேலும் செய்திகள்