சென்னை வரும் பிரதமர் மோடி தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார்

சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்கிறார்.

Update: 2017-11-06 03:54 GMT
சென்னை

இந்தியாவின் ‘நம்பர் 1’ தமிழ் நாளிதழ் என்ற சிறப்பை பெற்ற ‘தினத்தந்தி’ பவள விழா ஆண்டை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அதை கொண்டாடும் விதமாக, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று (திங்கட் கிழமை) ‘தினத்தந்தி’யின் பவள விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை  தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். காலை 9.55 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை அவர் வந்தடைகிறார்.அங்கிருந்து காரில் புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, காலை 10.30 மணி அளவில் ‘தினத்தந்தி’ பவள விழா நடைபெறும் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்ட பத்துக்கு வருகிறார். விழாவில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றுகிறார்.

பின்னர் பிரதமர் மோடி  தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி. சோமநாதன் மகள் திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.

பின்னர் 12-30 மணிக்கு கோபாலபுரம் செல்லும்  பிரதமர் அங்கு தி.மு.,க தலைவர் கருணாநிதியை சந்தித்து  நலம் விசாரிக்கிறார்.

இது குறித்து தி.மு.க எம்பி டிகே எஸ் இளங்கோவன் கூறும் போது :-

திமுக தலைவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி-பிரதமர் மோடி சந்திப்பில் அரசியல் நோக்கம் இருப்பதாக நான் கருதவில்லை. மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்