பாமரனுக்கும், பாவலவனுக்கும் பிடிக்கும் அளவிற்கு படிக்க படிக்க செய்தி தருவதும் ‘தினத்தந்தி’ தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து

‘தினத்தந்தி’ பவள விழாவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.;

Update: 2017-11-05 15:06 GMT
சென்னை,

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

குழந்தைகளுக்கு கூட புரியும் அளவிற்கு செய்தி தருவதும், பாமரனுக்கும், பாவலவனுக்கும் பிடிக்கும் அளவிற்கு அதை படிக்க படிக்க செய்தி தருவதும் தினத்தந்தி தான். தமிழக அரசியல் கோட்டையிலிருந்து தெருக் கோடிக்கு எடுத்துச் செல்வதும் தினத்தந்தி தான். பாராளுமன்றத்தையும், சட்டமன்றத்தையும் பாமரனுக்கும் புரிய வைப்பதும் தினத்தந்தி தான். இனி பிறக்கப்போகும் குழந்தைக்கும் தமிழ் சேவையை தினத்தந்தி தொடர்ந்து செய்யும் என்ற வரலாற்றை படைக்கும் தருணம் இப்பவளவிழா.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்