தமிழகம், புதுச்சேரியின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுச்சேரியின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காற்றழுத்த தாழ்வு நிலை, தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக்கரை வரை நிலவி வருகிறது.மேலும் மன்னார் வளைகுடா பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுச்சேரியின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் மாலை வேளைகளில் விட்டுவிட்டு இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.