சென்னயில் கனமழை எதிரொலி: 4 விமானங்கள் தாமதம்

கனமழை காரணமாக மும்பை, டெல்லி, திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன.

Update: 2017-11-04 04:21 GMT
சென்னை,

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களின் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சாலைகளில் தேங்கிய மழை நீர் வடியாமல் உள்ள பகுதிகளில் இன்னும் போக்குவரத்து சீரடையவில்லை. தொடர் மழையால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதலே சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சென்னையில் இருந்து டெல்லி, மும்பை செல்லும் 2 விமானங்கள் 3 மணிநேரம் தாமதம் ஆகியுள்ளது. அதேபோல், மும்பை, டெல்லி, திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்கள் தாமதம் ஆகியுள்ளது.  தமிழகத்தில் நாளை வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக  இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்