ஒரே குடும்பத்தில் தீக்குளித்து 3 பேர் பலி கந்துவட்டி கொடுத்த 3 பேர் கைது
ஒரே குடும்பத்தில் தீக்குளித்து 3 பேர் பலி தொடர்பாக கந்துவட்டி கொடுத்த 3 பேரை போலீசார் கைதுச் எய்யபட்டனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மம் எனும் கிராமத்தை சேர்ந்தவர். இவரது மனைவி சுப்பு லட்சுமி (26). இவர்களுக்கு மதி ஆருண்யா (4), அட்சயா(1Ñ) ஆகிய 2 குழந்தைகள் இருந் தனர். நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக இசக்கிமுத்து தனது மனைவி, குழந்தைகளுடன் வந்தார். அவருடன் இசக்கிமுத்துவின் தம்பி கோபியும் வந்திருந்தார். குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் அலுவலகம் முன்பு அவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப் போது இசக்கி முத்துவுடன் வந்த கோபி கழிவறை செல்வதாக கூறி சென்றார்.
இந்தவேளையில் இசக்கி முத்து தான் மறைத்து வைத் திருந்த மண்எண்ணையை தன் மீதும், தனது மனைவி, குழந்தைகள் மீதும் ஊற்றி தீவைத்தார். தீ மளமளவென பற்றி எரிந்தது. இதை சற் றும் எதிர்பாராத அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மண்ணை அள்ளி வீசி தீயை அணைத்து 4 பேரையும் காப் பாற்ற முயன்றனர்.
சிறிது நேரத்தில் அவர் களது உடல் கருகியது. உடனே அவர்களை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுப்புலட்சுமி மற்றும் குழந்தைகள் மதி ஆருண்யா, அட்சயா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இசக்கி முத்து தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக இசக்கிமுத்து, சுப்புலட்சுமி ஆகியோரிடம் நெல்லை ஜெ.எம்.-3 கோர்ட்டு நீதிபதி கார்த்தி கேயன் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றார். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து விசாரணை மேற் கொண்டார். கந்துவட்டி கொடுமை காரணமாக இசக்கிமுத்து தனது மனைவி, குழந்தைகள் மீது தீவைத்து தானும் தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
இன்று பிரேதபரிசோதனை முடிந்த பின் நெல்லையில் தீக்குளித்த 3 பேரின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தது மருத்துவமனை நிர்வாகம். நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிணவறை முன் பல்வேறு கட்சியினர் போராட்டம்
இந்த் சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்திய முத்து லட்சுமி, அவரது கணவர் தளவாய்ராஜ், முத்து லட்சுமியின் மாமனார் காளிராஜ் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியது (306,511), கந்துவட்டி கொடுமை ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து குற்ற வாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட் டது. தனிப்படை போலீசார் காசிதர்மத்துக்கு உடனடி யாக விரைந்து சென்று முத்துலட்சுமி, தளவாய்ராஜ், காளிராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.கைதான 3 பேரும் இன்று காலை நெல்லை அழைத்து வரப்பட்டனர். பாளை போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.