‘நீல திமிங்கலம்’ விளையாடிய என்ஜினீயர் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
‘நீல திமிங்கலம்’ விளையாடிய என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்குன்றம், -
‘நீல திமிங்கலம்’ விளையாடிய என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
சென்னை செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட பழையஅலமாதி சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் தினேஷ் (வயது 26). என்ஜினீயர்.
இவர், மும்பையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கடந்த 2 வருடங்களாக வேலை செய்து வந்தார். கடந்த 30-ந் தேதி தீபாவளிக்காக விடுமுறையில் தனது வீட்டுக்கு வந்தார்.
தீபாவளி பண்டிகையை பெற்றோருடனும், நண்பர்களுடனும் கொண்டாடினார். ஆனால் மும்பையில் இருந்து வந்ததில் இருந்து அவர், செல்போனில் ஏதோ விளையாடிக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.
தீபாவளி முடிந்தவுடன் முழு நேரமும் செல்போனில் மூழ்கி கிடந்துள்ளார். கடந்த 5 நாட்களாக வீட்டில் யாருடனும் பேசாமலும், படுக்கை அறையை விட்டு வெளியே வராமலும் இருந்து உள்ளார். பிளேடால் தனது இடது கையை அறுத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், மகனை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த தினேஷ், திடீரென படுக்கைஅறையின் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தினேஷின் செல்போன், மடிக்கணினி ஆகியவற்றை கைப்பற்றி ஆராய்ந்தனர். அதில் தினேஷ், ‘நீல திமிங்கலம்’ விளையாடியதால் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தினேஷ் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் அவர், “எனக்கு தெரியாமல் ஏதோ புதிய உலகம் தெரிகிறது. நான் மெல்ல மெல்ல எதோ எழுந்துகொண்டே போகிறேன்” என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.