காட்சியை நீக்க நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ ஒப்புக்கொண்டார்களா? - அமீர் கேள்வி

காட்சியை நீக்க நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ ஒப்புக்கொண்டார்களா? என இயக்குனர் அமீர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2017-10-21 15:46 GMT
சென்னை,

நடிகர் விஜய் நடித்து அண்மையில் வெளியான மெர்சல் படத்தில் மோடி அரசின் ஜி.எஸ்.டி. குறித்து கடுமையாக விமர்சித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் அதரவு தெரிவித்துள்ளது.

நடிகர் பிரபு தெரிவித்துள்ள கருத்தில் தணிக்கை செய்து வெளியான படத்தில், காட்சிகளை நீக்குவது முறையல்ல என கூறியிருந்தார். மெர்சல் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டாம் என நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.

இந்நிலையில்  இயக்குனர் அமீர் தந்தி டிவிக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

அரசியல் கட்சிகளின் அழுத்தத்தால் தான் காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.  காட்சியை நீக்க நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ ஒப்புக்கொண்டார்களா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்