திரைப்படத்துறை புறக்கணித்த பிறகு அரசியல் பற்றி கருத்து சொல்கிறார் நடிகர் கமல்ஹாசன் மீது தமிழிசை சவுந்தரராஜன் தாக்கு

கடலூர்,
50 ஆண்டுகள் எதைப் பற்றியும் கவலைப் படாமல் இருந்துவிட்டு, திரைப்படத்துறை புறக்கணித்த பிறகு கமல்ஹாசன் அரசியல் பற்றி கருத்து சொல்கிறார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கடலூர் வந்த பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகை மாவட்டம் பொறையாரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டிடம் இடிந்து விழுந்து 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். குடிசைமாற்று வாரியம், வீட்டுவசதி வாரிய கட்டிடங்களும் இடிந்துவிழும் நிலையில் தான் இருக்கிறது. இதுபோன்ற கட்டிடங்கள் இடிந்துவிழுந்து உயிர் பலி ஏற்படாமல் தடுக்க உடனே நடவடிக்கை எடுத்து அவைகளை பலப்படுத்த வேண்டும்.
நடிகர்கள் விமர்சனம் மட்டுமே செய்கிறார்கள். நாங்கள் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் ஆட்சி நடத்தி வருகிறோம். நடிகர் கமல்ஹாசன் விளம்பரத்துக்காக விமர்சனம் செய்து பேசுகிறார். சமுதாய அக்கறை உள்ளவராக இருந்தால் 50 ஆண்டுகள் தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தது.
அப்போது எதைப் பற்றியும் அவர் கவலைப்படாமல் இருந்துவிட்டு, இன்று திரைப்படத்துறை புறக்கணித்த பிறகு அரசியல் பற்றி கருத்து சொல்கிறார். டுவிட்டர், இணையதளத்தில் அரசியல் செய்யமுடியாது. களத்தில் இறங்கி அரசியல் செய்யவேண்டும். அது மட்டுமல்ல, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரித்துவிட்டு, இப்போது மன்னிப்பு கேட்கிறேன் என்கிறார்.
இவர் மன்னிப்பு கேட்க வேண்டிய தவறுகள் நிறைய உள்ளன. பணமதிப்பு நீக்க நடவடிக்கை திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு. ஜி.எஸ்.டி.யால் 200 மருந்துகளுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணபரிவர்த்தனையால் திருட்டு, வழிப்பறி, ஊழல் குறைந்துள்ளது. ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு மத்திய அரசு விமர்சிக்கப்படுகிறது.
மெர்சல் படத்துக்கு ஒரே நாளில் ரூ.33 கோடி எப்படி வசூல் கிடைத்தது. ரூ.200 டிக்கெட்டை ரூ.2 ஆயிரத்துக்கு விற்கிறார்கள். இது ஊழல் இல்லையா? லஞ்சம் இல்லையா? இதனால் மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். மக்களுக்கு பயனுள்ள வரி விதிப்பு முறையை தவறாக பேசுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.