தமிழக அனுபவம் குறித்து முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் எழுதியுள்ள புத்தகம் வெளியீடு
தமிழக அனுபவம் குறித்து முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் எழுதியுள்ள புத்தகம் இன்று வெளியிடப்பட்டது.
சென்னை
தமிழக அனுபவம் குறித்து முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவ் புத்தகம் ஒன்று எழுதி உள்ளார். புத்தகத்திற்கு "அந்த நிகழ்வுகள் நடந்த நாட்கள்" என பெயரிடபட்டு உள்ளது. அந்த புத்தகத்தில் தமிழகத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகள் குறித்து புத்தகத்தில் பரபரப்பு தகவல் கூறப்பட்டு உள்ளது
புத்தக வெளியீட்டு விழாவில் வித்யாசகர் ராவ் கூறியதாவது:-
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நடந்த நிகழ்வுகள் "ஜெயலலிதா தன்னை வரவேற்றது இனிய அனுபவம்" நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது எப்படி? ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடுக்கப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் என்ன? ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, அவசர சட்டம் நிறைவேற்ற தனது பங்கு என்ன? என்பது குறித்து அந்த புத்தகம் சொல்லும் என வித்யாசாகர் ராவ் கூறி உள்ளார்.
விழானில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேசியதாவது:-
அரசியல் சாசன சட்டப்படியே செயல்பட்டார், அரசியல் பார்வையுடன் ஆளுநர்கள் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கக் கூடாது. ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. அரசு பொறுப்புடன் ந டந்து கொள்கிறதா என்பதை பொறுத்தே மக்கள் தீர்ப்பு அமையும் என பேசினார்.