ப்ளூவேல் விளையாட்டு: சிவகாசி அருகே இளைஞர் தற்கொலை முயற்சி
சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் (ப்ளூவேல்)நீலத்திமிங்கல விளையாட்டு விளையாடிய இளைஞர் தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில் நீலத்திமிங்கல் விளையாட்டு விளையாடிய ஜெகதீஸ்வரன் (வயது 18) பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. தற்கொலைக்கு முயன்ற ஜெகதீஸ்வரன் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே அவர் வீட்டில் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இந்த விளையாட்டு பற்றிய செய்திகள் வெளியாகாமல் இருந்தன. தற்போது சிவகாசியில் இளைஞர் ஜெகதீஷ் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.