பொதுமக்களை மிரட்டும் வகையில் ஆயுதங்களுடன் ரெயில் பயணம் செய்து மாணவர்கள் அட்டகாசம்
புறநகர் ரயிலில் கத்தி, வீச்சறுவாள், பட்டாசுகளுடன் மாணவர்கள் பொதுமக்களை மிரட்டும் வகையில் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை
பஸ் டே என கொண்டாடி வந்த மாணாவர்கள், பேருந்தின் மீது ஏறியும், போக்குவரத்து இடையூறும் செய்யும் விதமாக அட்டகாசம் செய்வதால் போலீஸாரால் அப்படிப் பட்ட நிகழ்வுக்கு தடை விதித்தது.
இந்நிலையில், மாணவர்கள் கத்தி, கம்பு, வீச்சறுவாள், பட்டாசு உள்ளிட்ட அபாயகரமான பொருட்களுடன் ரெயிலில் தொங்கிய படி சாகசம் செய்த சம்பவம் பொதுமக்களை அதிரசெய்துள்ளது.
ரெயிலில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது என்ற சட்டம் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மாணவர்கள் கத்தி, பட்டாசுகளுடன் சென்றது அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து, நெமிலிச் சேரிக்கு செல்லும் புறநகர் ரெயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்து கல்லூரி ரெயில் நிலையம் அருகே கத்தியுடன் திரிந்த ஒரு மாணவரை போலீசார் பிடித்து உள்ளனர். மேலும் சில மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வீடியோ