18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டது.
சென்னை
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்தது தொடர்பாக தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கில் 18 பேரின் மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன் படி கடந்த 4ஆம் தேதி விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் 500 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை சபாநாயகர் தரப்பு நீதிபதியிடம் தாக்கல் செய்தது.
அப்போது அந்த வழக்கு விசாரணையை நீதிபதி 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கபட்டது. அதன்படி டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று விசாரணை தொடங்கியது.
டிடிவி தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடினார். முதல்வர் சார்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதாடினார்.
இந்த வழக்கில் கூடுதல் மனு தாக்கல் செய்ய சபாநாயகர் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதடினார்.
எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு கூடுதல் மனுவில் என் மீதான குற்றச்சாட்டு அதிகம் உள்ளது வழக்கை ஒருவாரம் ஒத்திவைக்க வேண்டும் முதலமைச்சர் தரப்பில் வாதாடப்பட்டது.
இதை தொடர்ந்து 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டது. தினகரன், முதலமைச்சர், சபாநாயகர் தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மறு உத்தரவு வரும்வரை பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தடைவிதிக்கபட்டது. கூடுதல் மனு, பதில் மனு, பதில் மனுவுக்கு பதில் மனு ஆகியவற்றை அனைத்து தரப்பும் அக். 23க்குள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.