கெயில் திட்டத்தை கொண்டு வந்ததே காங்கிரஸ் - திமுக கூட்டணிதான் - பாரதீய ஜனதா பதில்

கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிராக போராட திமுகவுக்கு தகுதியில்லை என பாரதீய ஜனதா விமர்சனம் செய்து உள்ளது.

Update: 2017-10-08 07:56 GMT
சென்னை,


விவசாய நிலங்களுக்கு இடையே எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை நிறைவேற்ற முயன்றால் 7 மாவட்ட விவசாயிகளுடன் இணைந்து தி.மு.க. போராடும் என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

இந்நிலையில் கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிராக போராட திமுகவுக்கு தகுதியில்லை என பாரதீய ஜனதா விமர்சனம் செய்து உள்ளது.

பாரதீய ஜனதாவின் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் பேசுகையில், கெயில் திட்டத்திற்கு எதிராக போராட திமுகவுக்கு தகுதியில்லை.  இந்த திட்டத்தை கொண்டு வந்ததே திமுக - காங்கிரஸ் கூட்டணிதான். திமுகவை நம்பி விவசாயிகள் களத்தில் இறங்க வேண்டாம் என கூறிஉள்ளார். 

மேலும் செய்திகள்