இரட்டை இலை சின்னம் விவகாரம் - டிடிவி தினகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக டிடிவி தினகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு;
புதுடெல்லி
இரட்டை இலை விவகாரம் தொடர்பாக இன்று இறுதி விசாரணை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி டிடிவி தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளது.
இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட், தினகரனின் கோரிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு டிடிவி தினகரன் தரப்புக்கு மதுரை ஐகோர்ட் கிளை அறிவுறுத்தியது.
இதை தொடர்ந்து டிடிவி தினகரன் தரப்பு சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டு உள்ளது. இன்று கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.