ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷனுக்கு எதிரான மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷனுக்கு எதிரான மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2017-10-04 08:43 GMT


சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமி‌ஷனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றது. இன்று விசாரணை நடத்திய ஐகோர்ட்டு, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷனுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் விசாரணை நேர்மையாக நடைபெறாது என்ற மனுதாரரின் குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை என தெரிவித்தது.  மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் செல்லும் என குறிப்பிட்டது.

மேலும் செய்திகள்