புதிதாக டெலிவிஷன்- பத்திரிக்கை தொடங்க எடப்பாடி பழனிசாமி அணி திட்டம்
புதிதாக டெலிவிஷன்- பத்திரிக்கை தொடங்க எடப்பாடி பழனிசாமி அணி திட்டமிட்டு உள்ளது.
சென்னை,
அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயா டி.வி., டி.டி.வி.தினகரன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கட்சி சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ள இந்த பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியைத்தான் தொண்டர்கள் பார்க்கிறார்கள்.
ஆனால் டி.டி.வி.தினகரன் தொடர்பான செய்திகள் மட்டுமே வெளியிடப்படுகிறது. அரசு திட்டங்கள், எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பற்றிய செய்திகளை தவிர்த்து விடுகின்றனர்.
இதனால் எடப்பாடி அணியினர் தங்களை பற்றிய தகவல்களை தொண்டர்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியாமல் திணறுகின்றனர்.
எனவே புதிதாக நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி தொடங்க முடிவு
செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தனக்கு நம்பகமான மந்திரிகள் எஸ்.பி. வேலுமணி மற்றும் பி.தாங்கமணி ஆகியோர் மூலம் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 10 க்கும் மேற்பட்ட பெயர்கள் விவாதிக்கப்பட்டன, ஆனால் சமீபத்திய நாட்களில் முன்னேற்றங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை, "என்று ஒரு மூத்த மந்திரி ஒருவர் தெரிவித்தார். அமைச்சர் பாண்டியராஜன் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து கொடுத்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது பெயர் இடம் பெறும் வகையில் புதிய பெயரை உருவாக்க திட்ட மிட்டுள்ளனர். நாளிதழ் மற்றும் டி.வி. தொடங்குவதற்கு லைசென்சு பெறுவது தொடர்பான பணிகளும் நடந்து வருகிறது.