எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்களை அனுப்பாவிட்டால் நடவடிக்கை என பள்ளிகளுக்கு மிரட்டல்டாக்டர் ராமதாஸ்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட எந்த அரசு விழாவுக்கும் மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தடை விதித்திருக்கிறது.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட எந்த அரசு விழாவுக்கும் மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தடை விதித்திருக்கிறது. ஆனால், அதை மீறி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சாதாரண உடையில் கட்டாயப்படுத்தி எம்.ஜி.ஆர் விழாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, மாணவர்களை விழாவுக்கு அனுப்ப மறுத்த பள்ளி நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஒருபுறம் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்களை அனுப்பக்கூடாது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி விட்டு, மறுபுறம் மாணவர்களை அனுப்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாய்மொழியாக மிரட்டல் விடுப்பது ஐகோர்ட்டு அவமதிப்பு என்பதைத் தவிர வேறென்ன?.
எம்.ஜி.ஆரைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் அவருக்கு நூற்றாண்டு விழா நடத்துவதையும், அவரது கொள்கைகளுக்கு எதிராக மக்களைக் கொடுமைப்படுத்துவதையும் விட பெரிய அவமரியாதையை எம்.ஜி.ஆருக்கு செய்து விட முடியாது. அனைத்து அத்துமீறல்களையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சரியான நேரத்தில் மிகச்சரியான பாடத்தை அவர்கள் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.