சிவாஜி மணிமண்டப விழா: ”இதைவிட பெரிதாக விழா எடுப்போம்”டுவிட்டரில் கமல்

எதிர்காலத்தில் இதைவிட பெரிதாக விழா எடுப்போம் எங்கள் அய்யாவிற்கு என நடிகர் கமல் டுவிட்டரில் கூறியுள்ளார்.

Update: 2017-10-01 17:31 GMT
சென்னை,

சிவாஜி கணேசன் பிறந்தநாளான இன்று சென்னையில் அடையாறில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டப திறப்பு விழா நடைபெற்றது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.  இந்த விழாவில்  விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பெஞ்சமின் சிவாஜி குடும்பத்தினர் ராம்குமார், பிரபு மற்றும் விக்ரம் பிரபு,  ரஜினி, கமல், நடிகர்கள் ராஜேஷ், விஜயகுமார், நாசர், சரத்குமார், விஷால், ராதிகா, கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நடிகர் கமல் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

சிவாஜி மணிமண்டப விழா இனிதே நடந்தேறியது, எதிர்காலத்தில் இதைவிட பெரிதாக விழா எடுப்போம் எங்கள் அய்யாவிற்கு என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்