ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவாக தலைமை செயலக ஊழியர்கள் போராட்டம்
ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவாக தலைமை செயலக ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சென்னை,
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட் டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறை வேற்றும் வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.
ஜாக்டோ - ஜியோவின் ஒரு பிரிவினர் நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு தற்போது தலைமை செயலக சங்கத்தின் ஒரு பிரிவினர் ஆதரவு அளித்துள்ளனர்.
தலைமை செயலக சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஜெ.கணேசன் தலைமையில் நேற்று மாலை யில் நடந்தது. இதில் 364 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது சிலர் அரசு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் நாமும் பங்கேற்க வேண்டும் என்று கூறினார்கள். இதனால் தலைமை செயலக சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. பின்னர் ஜாக்டோ ஜியோ அமைப்புடன் இணைந்து நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம் - தமிழ்நாடு தலைமை செயலக சங்க பொதுக்குழுவில் முடிவு எடுக்கபட்டது. அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர்கள் தவிர 4,500 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கபட்டது.
இதையடுத்து தலைமை செயலக சங்கத்தின் ஒரு பிரிவினர் அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று முதல் ‘ஸ்டிரைக்.’கில் ஈடுபடு கிறார்கள். தலைமை செயலகத்தில் 5 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். ரிக் கார்டு கிளார்க் முதல் கூடுதல் செயலாளர் வரை இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் எத்தனை பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.
ஆனால் சங்க தலைவர் ஜெ.கணசேன் தலைமையிலான தலைமை செயலக ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
தலைமை செயலக சங்க ஊழியர்கள் போராட்டத்தில் தீவிரமாக கலந்து கொண்டால் அரசு பணிகள் முற்றிலுமாக முடங்கிவிடும். அனைத்து துறைகளுக்கும் திட்டங்களையும் பணிகளையும் முடுக்கி விடும் உத்தரவு துறை செயலாளர்களிடம் இருந்து செல்லும்.
அந்த பணியை செய்யக் கூடிய உதவி செக்ஷன் அலுவலர், துணை செயலாளர் மற்றும் இடைமட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கோப்புகள் தேங்கி பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.