சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தினால் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகளும், மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-09-08 17:39 GMT
சென்னை, 

தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகளும், மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டங்களில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் சில அமைப்புகள் சாலைமறியல், ரெயில்மறியல் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.

இந்தநிலையில் நீட் தேர்வுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம் என்றும், சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையில் போராட்டம் நடத்தக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு  தீர்ப்பு வழங்கி உள்ளது.

இதையடுத்து சென்னை நகரில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் போராட்டங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்