அரசின் முடிவை திரும்ப பெறாவிட்டால் மோசமான விளைவை சந்திக்க நேரிடும் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
விரைவில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை குறைப்பை உடனடியாக திரும்ப பெறவில்லை என்றால் விரைவில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
என்ஜினீயரிங் மற்றும் மருத்துவக் கல்வி பயிலும் ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் கிறிஸ்தவ மாணவர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த ‘போஸ்ட்’ மெட்ரிக் கல்வி உதவித்தொகைகளை, முன்னறிவிப்பு ஏதுமில்லாமல், திடீரென்று பெருமளவு குறைத்து அரசு ஆணை வெளியிட்டு, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமுதாய மக்களை வஞ்சித்திருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு, தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு ஒதுக்கீடு மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.12½ லட்சம் வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையை 4 லட்சம் ரூபாயாகவும், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.85 ஆயிரம் அளிக்கப்பட்டு வந்ததை, ரூ.70 ஆயிரமாகவும் குறைத்து அநியாயமாகவும், அக்கிரமமாகவும் ஒரு அரசு ஆணையை வெளியிட்டு இருக்கிறது.
அநீதியான இந்த அரசு ஆணையின் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதிதிராவிட, பழங்குடியின, கிறிஸ்தவ சமுதாயங்களைச் சேர்ந்த மருத்துவ மற்றும் பொறியியல் கல்வி பெறும் மாணவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, அவர்களது எதிர்காலம் கேள்விக்குறிக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
‘நீட்’ கொடுமையால் நிகழ்ந்த அரியலூர் மாணவி அனிதா மரணத்தின் ஈரம்கூட இன்னும் காயவில்லை. அவரது சமாதியின் மீது போடப்பட்ட மலர்கள் இன்னும் காயவில்லை.
ஆனால், அதற்குள் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கனவுகளைச் சிதைக்கும் இன்னொரு மோசமான நடவடிக்கையாக கட்டணச் சலுகை குறைப்பு நடவடிக்கையை எடுத்து, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு மாபெரும் துரோகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பெரும்பான்மை இழந்த இந்த அ.தி.மு.க. அரசு செய்து முடித்திருக்கிறது.
ஏற்கனவே, எரிமலையாய் குமுறிக் கொண்டிருக்கும் மாணவர் சமுதாயத்தின் தவிப்பில் மேலும் எண்ணெய் ஊற்றும் வேலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு தொடர்ந்து ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை குறைப்பை உடனடியாக திரும்பப் பெறவில்லை என்றால், தமிழகத்தின் சமூகநீதிக் கொள்கைக்குத் தினமும் ஊனம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு விரைவில் மிகமோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.