நரியின் பேச்சைக்கேட்கும் குதிரையாக தினகரன் உள்ளார் குட்டிக்கதை மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிண்டல்
நரியின் பேச்சைக் கேட்கும் குதிரையாக தினகரன் உள்ளார் என்று குட்டிக்கதை மூலம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்தார்.
ஈரோடு,
ஈரோட்டில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேச்சின் இடையே தினகரனை கிண்டல் செய்யும் வகையில் மறைமுகமாக ஒரு குட்டிக்கதை கூறினார். அது வருமாறு:-
பாட்டு வித்வான் ஒருவர் இருந்தார். அவரை கச்சேரிக்கு அழைத்துச்செல்ல ஒரு குதிரை வண்டி இருந்தது. அந்த வித்வானை ஏற்றிச்செல்லும் குதிரைக்கு ஒரு அபரிமிதமான ஆசை வந்தது.
இந்த வித்வானை போல தானும் பாட்டுப்பாடி எல்லாருடைய பாராட்டு, பொன்னாடை, மலர் மாலைகள் பெற வேண்டும் என்று எண்ணியது. எனவே, வித்வானுக்கு கச்சேரி இல்லாத நாட்களில் அருகிலுள்ள காட்டு பகுதிக்கு சென்று கனைத்து கனைத்து தன் குரலுக்கு மெருகேற்றி கொண்டிருந்தது. குதிரையின் கனைப்பால் வந்த வித்தியாசமான குரலை ஒரு நரி கேட்டது. அது குதிரையை நோக்கி வந்தது. அது குதிரையிடம், “குதிரையாரே... குதிரையாரே... இப்படிப்பட்ட ஒரு இனிமையான குரலை என் வாழ்நாளில் கேட்டதே இல்லை. இந்த காட்டில் பல மிருகங்கள் தங்களுடைய குரல்தான் மிகவும் இனிமையானது என்ற மமதையில் உள்ளன. நீர் காட்டுக்குள் வந்து உங்கள் குரல் இனிமையை காட்டினால், உம்மிடம் போட்டி போட முடியாமல் அனைத்து மிருகங்களும் ஓட்டம் பிடிக்க ஆரம்பிக்கும். அதைக் கொண்டே உமது குரல் எத்தனை இனிமை என்பதை நீர் தெரிந்து கொள்வீர்” என்றது.
நரி தன்னைப் புகழ்வதை கேட்டு குதிரை மகிழ்ந்தது. நரி சொன்னதைப் போலவே, குதிரை காட்டுக்குச் சென்று சத்தமாக கனைத்தது. விதவிதமாக குதிரை கனைத்துக்கொண்டு இருந்தது. இதுவரை அப்படிப்பட்ட மோசமான, விகாரமான குரலை கேட்டிராத காட்டு விலங்குகள் பயந்துபோய் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளியேறத் தொடங்கின. நரி இதைத்தான் எதிர்பார்த்து பதுங்கி இருந்தது. அது வெளியேறிய அந்த விலங்குகளை ஒவ்வொன்றாக அடித்து சாப்பிட்டது. ஒரு கட்டத்தில் அலுத்துப்போன நரி, குதிரையிடம் பாட்டை நிறுத்தச் சொன்னது.
குதிரை, நரியிடம் வந்தபோது அங்கு ஏகப்பட்ட விலங்குகள் செத்துக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது. இது என்ன என்று கேட்டதற்கு, அந்த நரி, “குதிரையாரே, இவையெல்லாம் உம்மோடு மோதுவதற்கு பயந்து தற்கொலை செய்து கொண்டன” என்று சமாளித்தது. குதிரையும் அதனை நம்பி தனக்கு தானே பெருமைப்பட்டுக் கொண்டது. பின்னர் நரி, “குதிரையாரே, நான் சொல்கின்ற போதெல்லாம் நீ இப்படி வந்து உன் குரல் இனிமையைக் காட்டு” என்று கூறியது. குதிரையும் அதற்கு ஒப்புக்கொண்டதுடன், இனிமேல் கச்சேரிகளுக்கும் தானே போய் பாடி விடலாம் என்ற கனவில் வீட்டை நோக்கி நடந்தது.
ஆனால் அந்த நரியோ, எந்த இரையும் கிடைக்காதபோது, இந்த குதிரையை அடித்து உண்ணலாம் என்று சூழ்ச்சி செய்தது. நரியின் சூழ்ச்சியை அந்த குதிரை அறிய போவதில்லை.
இப்படித்தான் பலர் தன் பேச்சால் தனக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த பேச்சால் மக்களுக்கு எந்த பயனும் விளையப் போவதில்லை என்பதை இக்கூட்டத்தின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குட்டிக் கதை கூறினார்.