கிரானைட் முறைகேடு தொடர்பான 3 வழக்குகளில் 3,153 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
மேலூர் கோர்ட்டில் நடந்து வரும் கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்குகளில் 3,153 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.
மேலூர்,
மேலூர் கோர்ட்டில் நடந்து வரும் கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்குகளில் 3,153 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். அதில் அரசுக்கு ரூ.289.67 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கிரானைட் வழக்குகள்
மேலூர் பகுதியில் அனுமதியின்றி கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் ரூ.16 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கடந்த 2012-ம் ஆண்டு மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். பின்னர் இந்த முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு கிரானைட் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகள் மேலூர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இவற்றில் போலீசார் தொடர்ந்த 98 வழக்குகளில் 71 வழக்குகளுக்கு ஏற்கனவே போலீசார் குற்றபத்திரிகைகள் தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் 3 கிரானைட் முறைகேடு வழக்குகளில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன.
அதில் ஒரு வழக்கில் கீழவளவு கிராமத்தில் வேப்பங்குடி கண்மாய், வாய்க்கால் புறம்போக்கு ஆகிய இடங்களில் அரசு அனுமதி பெறாமல் கிரானைட் கற்களை வெட்டி எடுத்த வழக்கில் அரசுக்கு 287.83 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பி.ஆர்.பி. கிரானைட் மற்றும் 26 பேர் மீது 2 ஆயிரத்து 769 பக்க குற்றப்பத்திரிகையும், கீழவளவு பகுதியில் பெரிய எழுவன் என்ற பெரிய இலஞ்சிக்கண்மாய் நீர்நிலை ஆதார பகுதிகளை சேதப்படுத்தி அரசுக்கு 1.84 கோடி ரூபாய் இழப்பீடு செய்ததாக 384 பக்க குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டன.
ரூ.289.67 கோடி இழப்பு
இதையடுத்து மேலூர் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 3 வழக்குகளில் மொத்தம் 3 ஆயிரத்து 153 பக்க குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர். அவற்றில் ரூ.289.67 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலூர் பகுதியில் தனியார் இடங்களில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதி கோரி அப்போதைய மதுரை கலெக்டர் சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்குகளில் 42 வழக்குகள் மற்றும் போலீசார் தொடர்ந்த 20 வழக்குகள் மீதான அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் மாதம் 4-ந் தேதிக்கு மேலூர் கோர்ட்டு தள்ளிவைத்தது.