சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 26 பேர் மாற்றம்

சென்னையில் 26 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர்.

Update: 2017-09-06 18:30 GMT
சென்னை, 

சென்னையில் 26 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பிறப்பித்தார்.

சென்னை வேப்பேரி இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் ஐகோர்ட்டு பாதுகாப்பு பிரிவுக்கும், வேப்பேரி இன்ஸ்பெக்டராக வீரகுமாரும் மாற்றப்பட்டனர். ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்துக்கு ஜெயராஜ், கோயம்பேடு பஸ் நிலைய போலீஸ் நிலையத்துக்கு பிராங்க் டி.ரூபன், புதுவண்ணாரப்பேட்டைக்கு பழனி, கொத்தவால்சாவடிக்கு ஆர்.சரவணன், திருவொற்றியூருக்கு பழனிவேல், மணலி புதுநகருக்கு ஆனந்தராஜன், செம்பியத்துக்கு ஜெகநாதன், எண்ணூருக்கு சத்தியன், திருமுல்லைவாயலுக்கு சீதாராமன், பெரியமேட்டுக்கு சிவராஜன், சங்கர்நகருக்கு ஆதிமூலம் ஆகியோர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்