திருநாவுக்கரசர் மகள் திருமணம் கவர்னர் வித்யாசாகர்ராவ்-மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திருநாவுக்கரசர் மகள் திருமண விழாவில் கவர்னர் வித்யாசாகர்ராவ், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Update: 2017-09-03 23:45 GMT
சென்னை

கவர்னர் வித்யாசாகர்ராவ்- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர்-கற்பகம் தம்பதியினரின் மகள் டி.அம்ருதாவுக்கும், சட்டத்துறை முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா-டாக்டர் மீனாட்சி தம்பதியினரின் மகனுமான எஸ்.இசக்கி துரைக்கும் சென்னை, வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது மற்றும் மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்திற்கு வந்தவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா ஆகியோர் வரவேற்றனர்.

மணமக்களை தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர்ராவ், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, பென்ஜமின் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.

தலைவர்கள் வாழ்த்து

புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி, முன்னாள் மத்தியமந்திரி ப.சிதம்பரம் எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக், தேசிய செயலாளர்கள் சின்னாரெட்டி, சஞ்சய்தத், முன்னாள் மாநிலத்தலைவர்கள் குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, தெலுங்கானா மாநிலத் தலைவர் உத்தம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
புதுச்சேரி மாநில மந்திரி மல்லாடி கிருஷ்ணாராவ், கர்நாடக மாநில மந்திரி பரமேஸ்வரன், அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் மாநில செயலாளர் நல்லக்கண்ணு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், த.மா.கா. மூத்த துணை தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.

நடிகர்-நடிகைகள்

வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், தினத்தந்தி நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால், முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், கார்த்திக், ராம்குமார், பிரபு, பார்த்திபன், பாண்டியராஜன், விவேக், ராஜேஷ், சிவகார்த்திகேயன், நடிகை லதா, திரைப்பட இயக்குனர்கள் ரஞ்சித், மனோஜ்குமார், இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவா ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் செய்திகள்