நிர்மலா சீதாராமனுக்கு பதவி அளித்தது தமிழக மக்களின் உணர்வை கிண்டல் செய்வது போல் உள்ளது - விஜயதாரணி

நிர்மலா சீதாராமனுக்கு பதவி அளித்தது தமிழக மக்களின் உணர்வை கிண்டல் செய்வதுபோல் உள்ளது என விஜயதாரணி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Update: 2017-09-03 15:45 GMT
சென்னை,

ராணுவ மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர், கடந்த மார்ச் மாதம் கோவா முதல்–மந்திரி பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து அவர் ராணுவ மந்திரி பதவியை விட்டு விலகினார். நிதி மந்திரி அருண் ஜெட்லி, ராணுவ இலாகாவை கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது மந்திரிசபையை  மாற்றி அமைத்தார். அவர் வர்த்தக, தொழில் துறையை தனிப்பொறுப்பாக கவனித்து வந்த ராஜாங்க மந்திரி பதவியில் இருந்து, நிர்மலா சீதாராமனை கேபினட் மந்திரியாக அந்தஸ்து உயர்த்தி, அவரை புதிய ராணுவ மந்திரி ஆக்கினார். 

இந்த நிலையில் இது குறித்து விஜயதாரணி எம்.எல்.ஏ. கூறியதாவது:

நீட்தேர்வு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, தமிழக அரசு அனிதா சட்டம் கொண்டுவர வேண்டும்.அனிதா உயிரிழந்த நிலையில், நிர்மலா சீதாராமனுக்கு பதவி அளித்தது தமிழகமக்களின் உணர்வை கிண்டல் செய்வதுபோல் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்