அரியலூர் மாவட்டத்தில் இன்று கடையடைப்பு
அரியலூரில் இன்று கடையடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர்
மாணவி அனிதாவின் தற்கொலையை தொடர்ந்து நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசின் போக்கை கண்டித்தும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும் இன்று (சனிக்கிழமை) மாவட்டம் முழுவதும் கடையடைப்பு நடத்த அரியலூர் மாவட்ட வணிகர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
இதற்கு தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தே.மு.தி.க., ம.தி.மு.க., திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.