பொதுக்குழுவை கூட்டுவதை எதிர்க்க டி.டி.வி. தினகரனுக்கு அதிகாரம் இல்லை அமைச்சர் ஜெயக்குமார்
பொதுக்குழுவை கூட்டுவதை எதிர்க்க டி.டி.வி. தினகரனுக்கு அதிகாரம் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்
சென்னை,
சசிகலாவை தவிர பொதுக் குழுவை கூட்ட வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.
இதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலடியாக விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:
நாங்கள் 12-ந்தேதி பொதுக்குழுவை கூட்டயிருக்கிறோம். பொதுக்குழுவை கூட்டக் கூடாது என்று எங்கள் மீது வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை. 3-ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதலுடன் கூட்டம் நடக்கும்.
பொதுக்குழு கூட்டுவதை எதிர்க்க டி.டி.வி. தினகரனுக்கு அதிகாரம் இல்லை. திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும். பொதுக்குழு பணிகள் 100 சதவீதம் ஒற்றுமையாக நடந்து வருகின்றன.
தினகரனின் எந்த நடவடிக்கையும் எங்களை கட்டுப்படுத்தாது. ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரனுக்கு தொடர்பில்லை. கட்சியை கையகப்படுத்துவேன் என்று தினகரன் கூறுவது நகைச்சுவையாக உள்ளது.
மாநில மக்கள் நன்மைக்காக மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்துள்ளோம். கடந்த காலங்களில் தி.மு.க.வும் அப்படிதானே செயல்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.